Offline
விஜயலெட்சுமியை தேடும் பணியில் ராடார் கருவி
Published on 08/28/2024 01:08
News

கோலாலம்பூர்:

விஜயலெட்சுமியை தேடும் பணியில் உதவுவதற்கு சிறப்பு ராடார் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் மலேசிய அணுசக்தி ஏஜென்சியில் இருந்து கொண்டு வரப்பட்ட ராடார் கருவி காணப்பட்டது.

நிலத்தில் ஊடுருவி சென்று ஆய்வு செய்யும் திறனை இந்த ராடார் கருவி கொண்டிருக்கிறது. தேடல் நடவடிக்கையில் மிகப்பெரிய உதவியாக இந்த கருவி செயல்படும்.

ஆந்திரா, குப்பம் பகுதியை சேர்ந்த 48 வயது விஜயலெட்சுமியை தேடி மீட்பதற்கு பல்வகை நுட்பங்கள், நிபுணத்துவங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இன்னொரு முயற்சியாக ராடார் கருவி இறக்கப்பட்டிருக்கிறது.

Comments