Offline
நிந்தனை குற்றச்சாட்டு: விசாரணைக் கோரினார் முஹிடின்
Published on 08/28/2024 01:11
News

கிளாந்தான்:

நிந்தனை சட்டத்தின் கீழ் தம் மீது சுமத்தப்பட்ட 3R குற்றச்சாட்டுகளை மறுத்து முன்னாள்

பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் விசாரணைக் கோரினார்.

நெங்கிரி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு கடந்த ஆகஸ்டு 14 ஆம் தேதி கிளந்தான், குவா மூசாங், Felda Perasu வில் நடைபெற்ற பெரிக்காத்தான் நேஷனல் பிரச்சாரத்தின் போது நிந்தனை உரை நிகழ்த்தியதாக குவா மூசாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று காலை அதன் தலைவருமான முஹிடின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் 115 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்த நிலையில் அப்போதைய மாட்சிமை தங்கிய பேரரசர் Al-Sultan Abdullah Sultan Ahmad Shah ஆட்சி அமைக்க தம்மை அழைக்காதது குறித்து பெர்சத்து தலைவருமான முஹிடின் கேள்வி எழுப்பினார் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.

குற்றம் நிருபிக்கப்பட்டால் 5 ஆயிரம் ரிங்கிட் வரையிலான அபராதம், 3 ஆண்டுகள் வரையிலான சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

Comments