கோலாலம்பூர்:
நாட்டின் 67 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மலாக்கா வரலாற்று மாநிலம் வண்ண விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது.
போர்க் காலத்திற்கு முந்தைய பாலங்கள் ஜாலுர் கெமிலாங் கொடிகளாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.
வரலாற்றுப்பூர்வ கம்போங் ஜாவா, பாசார் பாலங்கள் உள்நாட்டவர்களையும் சுற்றுப்பயணிகளையும் காந்தம் போன்று கவர்ந்து இழுக்கின்றன.
மெர்டேக்கா தின கொண்டாட்டங்கள் மலேசியர்களுக்கும் சுற்றுப் பயணிகளுக்கும் நீங்காத நினைவாக இருக்க வேண்டும் என்பதற்காக மலாக்கா முதலமைச்சர் டத்தோஸ்ரீ Abdul Rauf Yusoh சிந்தனையில் இந்த அலங்காரங்கள் உருபெற்றிருக்கின்றன.