Offline
புதிய உத்தரவு வரும் வரை தேடல் தொடரும்- ஃபாமி ஃபாட்ஸில்
Published on 08/28/2024 01:22
News

கோலாலம்பூர்:

புதிய உத்தரவு வரும் வரை ஆந்திரா, குப்பம் பகுதியை சேர்ந்த விஜயலெட்சுமியை (வயது 48) தேடும் நடவடிக்கை தொடரும் என்று லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரும் தொடர்புத் துறை அமைச்சருமான ஃபாமி ஃபட்ஸில் கூறினார்.

சுதந்திர நாள் கொண்டாட்டம் நெருங்கிவிட்ட போதிலும் விஜியலெட்சுமியை தேடும் பணி எவ்வகையிலும் தடைபடமாட்டாது என்று அவர் சொன்னார்.

தேடல், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரின் அர்ப்பணிப்பு அளப்பரியது என்று ஃபாமி தெரிவித்தார்.

பந்தாய் 1 கழிவு சுத்திகரிப்பு நிலையத்திற்கு இன்று காலை வருகை தந்த அமைச்சருக்கு நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேளான்மை ஏஜென்ஸி, தீயணைப்பு – மீட்பு, இலாகா அதிகாரிகள் விளக்கம் தந்தனர்.

திடக்கழிவுகள் அனைத்தும் வந்து சேரும் கடைசி இடம் இது தான். இதற்கு அப்பால் கழிவுகள் செல்வதற்கு இடம் இல்லை என்று அமைச்சருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

 

Comments