கோலாலம்பூர்:
ஆந்திரா, குப்பம் பகுதியை சேர்ந்த 48 வயது விஜயலெட்சுமியை தேடி மீட்கும் பணி நேற்று அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்ட பின்னர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியா மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது.
கடந்த ஆகஸ்டு 23 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்டு 31 ஆம் தேதி வரை முடங்கிக் கிடந்த இப்பகுதி இன்று காலை முதல் இயல்பு நிலைக்கு திரும்பியது.
கடைகள் திறக்கப்பட்டுவிட்டன. இருப்பினும் வாடிக்கையாளர்களின் வருகை மிகக் குறைவாகவே இருந்தது.
தோண்டப்பட்ட குழிகள் அனைத்தும் எப்போது மூடப்படும் என்ற கேள்வியும் வணிகர்கள், பொது மக்களிடையே எழுந்துள்ளது.
வாடிக்கையாளர்களின் வருகை கிட்டத்தட்ட 80 விழுக்காடு வீழ்ச்சிக் கண்டிருந்த நிலையில் இப்போது கடைகள் மீண்டும் திறக்கப்பட்டிருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது என்று கடைக்காரர்களும் வாடிக்கையாளர்களும் தெரிவித்தனர்.