Offline
ரஷ்யாவில் திடீரென காணாமல் போன ஹெலிகாப்டர்.. 22 பேர் கதி என்ன?
News
Published on 09/02/2024

மாஸ்கோ: ரஷ்யாவில் 19 பயணிகள் உள்பட 22 பேருடன் சென்ற மி -8 ரகத்தை சேர்ந்த ஹெலிகாப்டர் மாயமாகியது. கம்சட்கா தீபகற்ப பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால் அந்த ஹெலிகாப்டர் என்ன ஆனது என்று தெரியவில்லை. தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ரஷ்யாவில் 19 பயணிகள் உள்பட 22 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயமாகியுள்ளது. ரஷ்யாவின் தொலை தூர கிழக்கு பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்ப பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. மாயமான ஹெலிகாப்டர் மி -8 ரகத்தை சேர்ந்தது ஆகும்.

2 என்ஜின் கொண்ட இந்த ஹெலிகாப்டர் 1960-களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் பரவலாக இந்த ரக ஹெலிகாப்டரே அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாயமான இந்த ஹெலிகாப்டரை தேடும் பணியில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் மி -8 ரக ஹெலிகாப்டர் ரஷ்யாவில் விபத்தில் சிக்கியது. இதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

ரஷ்யாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த வகை ஹெலிகாப்டர்கள், சமீப காலமாக அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது மாயமாகியுள்ள ஹெலிகாப்டர் ஏதேனும் விபத்தில் சிக்கியதா? அல்லது வேறு ஏதேனும் சதிச்செயல் நடந்ததா? விமானத்தின் கதி என்ன என்பது பற்றிய எந்த தகவலும் தற்போது வரை கிடைக்கவில்லை.

ரஷ்யா – உக்ரைன் இடையே சண்டை நீடித்து வருகிறது. 2 வருடங்களுக்கும் மேலாக இந்த சண்டை நீடித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களும் தீவிர தாக்குதல் நடந்து வருகிறது. உக்ரைனும் ரஷ்யா மீது தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தகைய சூழலில் தான் ஹெலிகாப்டர் திடீரென மாயமாகி இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Comments