கோலாலம்பூர்:
தென் கொரியா,சியோலுக்குப் பயணப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் பாதிவழியில் மீண்டும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கே திரும்பியது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய MH66 என்ற அந்த விமானம் காலதாமதமாக நள்ளிரவு 12.01 மணிக்குத்தான் சியோலுக்குப் புறப்பட்டது என்று விமான நிறுவன அகப்பக்கம் தெரிவித்தது.
புறப்பட்ட சற்று நேரத்திற்குள் அந்த விமானம் மீண்டும் கே.எல்.ஐ.ஏ.வுக்குத் திரும்பிவிட்டதாக அந்த அகப்பக்கச் செய்தி குறிப்பிட்டது.
ஆகஸ்டு 19ஆம் தேதி, மலேசிய விமான நிறுவனத்திற்குச் சொந்தமான MH128 என்ற விமானம் ஆஸ்திரேலியா மெல்பர்னிலிருந்து கோலாலம்பூரை நோக்கி இரவு 11.20 மணிக்கு புறப்பட்ட சற்று நேரத்திற்கெல்லாம் அதிகாலை வேளையில் அலைஸ் ஸ்பிரிங்ஸ் அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாகத் தரை இறங்கியச் செய்தியை ஆஸ்திரேலியாவின் எஸ்.பி.எஸ். செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டது.
இதற்கு முன்னரும் கூட கடந்த சில வார காலகட்டத்திற்குள் மூன்று முறை மலேசிய ஏர்லைன்ஸைச் சேர்ந்த விமானங்கள் பயண வழியில் அவசரமாகத் தரை இறங்கின என்பதும் குறிப்பிடத் தக்கது