Offline

LATEST NEWS

அமெரிக்காவில் கார் மீது லாரி மோதி விபத்து: தீயில் கருகி 4 இந்தியர்கள் பலி
Published on 09/06/2024 02:38
News

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அர்கன்சஸ் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர விபத்து ஏற்பட்டது. நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற லாரி முன்னால் சென்ற கார்கள் உள்பட 5 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் தீ பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த பெண் உள்பட 4 இந்தியர்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்த இந்தியர்களில் தர்ஷினி வாசுதேசன் என்ற இளம்பெண் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments