Offline
முதலீட்டு மோசடி தொடர்பாக 591 புகார்கள் பதிவு – SSM தலைவர்
News
Published on 09/06/2024

கோலாலம்பூர்:

முதலீட்டு மோசடி திட்டங்கள் தொடர்பான மோசடிகள் அதிக அளவில் அதிகரித்து வருவதாகவும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கடுமையான அதிகரிப்பை காட்டுவதாகவும், இது நாட்டில் ஒரு தீவிர பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என்று நிறுவனங்கள் பதிவு துறை தலைவர் அமாட் சப்கி யூசோப் தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு முதல் முதலீட்டு மோசடி மற்றும் போலி வட்டித் திட்டங்களை வழங்கும் நிறுவனங்கள் குறித்து மொத்தம் 591 புகார்கள் வந்ததாக அவர் கூறினார்.

2022 ஆம் ஆண்டில், 28 முதலீட்டு மோசடி திட்டங்கள் மற்றும் மூன்று வட்டி திட்டங்கள் தொடர்பில் புகார்கள் பதிவாகின.

அதேநேரம் கடந்த ஆண்டு 320 முதலீட்டு மோசடி வழக்குகள் மற்றும் 46 வட்டி திட்ட வழக்குகள் என இந்த எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது.

அதேநேரம் இந்த ஆண்டு ஜூலை வரை, 190 முதலீட்டு மோசடி வழக்குகள் மற்றும் நான்கு மோசடியான வட்டி திட்டங்கள் தொடர்பான புகார்கள் உள்ளன என்று, இன்று சிரம்பானில் நபந்த ஒரு தொழில்முனைவோர் நிகழ்வை ஆரம்பித்து வைத்த பின்னர் அவர் கூறினார்.

முதலீட்டு மோசடியைத் தடுக்க தேசிய நிதிக் குற்றத் தடுப்பு மையத்துடன் மலேசிய நிறுவன ஆணையம் (SSM) நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக சப்கி கூறினார்.

 

Comments