Offline
Menu
லோரி மோதியதால் தடுப்புச் சுவர் இடிந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது விழுந்தது
Published on 09/08/2024 01:50
News

கோலாலம்பூர்: வெள்ளிக்கிழமை (செப். 6) உயர்த்தப்பட்ட டூத்தா – உலு கிளாங் விரைவுச் சாலையில் (டியூக்) தடுப்புச் சுவரில் லோரி மோதியது. இந்த விபத்தின் காரணமாக சுவரின் ஒரு பகுதி கீழே நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது விழுந்ததாக செந்தூல் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் அஹ்மத் சுகர்னோ முகமட் ஜஹாரி தெரிவித்தார். உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

இன்று முன்னதாக, இந்த சம்பவத்தின் புகைப்படம் ஆன்லைனில் பதிவேற்றப்பட்டது. கீழே நிறுத்தப்பட்டிருந்த காரின் மேல் சாலை சுவரின் பகுதிகளைக் காண முடிகிறது.

 

Comments