ஜாலான் பின்டாஸில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட ‘Op Mabuk’ நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் ஓட்டிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 20 முதல் 50 வயதுக்குட்பட்ட மூன்று ஓட்டுனர்களும் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 பிரிவு 45A (1) இன் கீழ் கைது செய்யப்பட்டதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் சாமி நியூட்டன் தெரிவித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 10,000 ரிங்கிட் முதல் 30,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம். இந்த நடவடிக்கையின் போது, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டிய 6 பேர் உட்பட பல்வேறு குற்றங்களுக்காக 13 சம்மன்களையும் போலீசார் அனுப்பினர். மொத்தம் 95 நபர்கள் மற்றும் 83 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.
இந்த நடவடிக்கை சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பைக் கண்காணிப்பதையும், போக்குவரத்துச் சட்டங்களுக்கு அவர்கள் இணங்குவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். ‘Op Mabuk’ சோதனை அதிகாலை 3 மணிக்கு முடிந்தது.