Offline
ரூ.15 கோடி மதிப்பிலான தங்க கிரீடத்தை விநாயகருக்கு காணிக்கையாக வழங்கிய ஆனந்த் அம்பானி
Published on 09/09/2024 02:12
News

ஆனந்த் அம்பானி, லால்பாக்சா ராஜா விநாயகருக்கு ரூ.15 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார். மும்பை, முழுதும் விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. மராட்டிய மாநிலம் மும்பையில், விநாயகர் சதுர்த்தி 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

இதை முன்னிட்டு, மும்பை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியின்போது, மும்பையில் உள்ள லால்பாக்சா ராஜா விநாயகர் கோவிலில், மக்கள் கூட்டம் அலைமோதும்.ஆண்டுதோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, லால்பாக்சா ராஜா விநாயகருக்கு, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 20 கிலோ தங்க கிரீடத்தை, தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி காணிக்கையாக வழங்கி உள்ளார்.

Comments