Offline
புல்வெட்டும் இயந்திரத்தில் பரவிய தீ ஆடவரின் உயிரைக் குடித்தது
Published on 09/09/2024 19:40
News

பெர்லிஸ்:

புல்வெட்டும் இயந்திரத்தப் பயன்படுத்தி வீட்டின் முன் புதர்களைச் சுத்தம் செய்து கொண்டிருந்த ஒரு நபர் அந்த இயந்திரம் திடீரென்று தீப்பற்றியதில் உடல் முழுவதும் நெருப்பில் வெந்து கருகி மாண்டார்.

பெர்லிஸ்,ஆராவில் ஜெஜாவி என்ற இடத்தில் உள்ள சொந்த வீட்டின் முன்புறத்தில் அவர் கருகியப் பிணமாகக் கிடந்தார்.

அவர் பற்றிய முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை. அவருக்கு 75 வயது என்பதும், அவர் டெலிக்கோம் மலேசியாவில் பணிபுரிந்து ஓய்வுப் பெற்றவர் என்பதும் மட்டுமே விவரமாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட வீட்டின் முன்புறத்தில் எரிந்த நிலையில் அந்த இயந்திரமும் அதற்கு சற்று தூரத்தில் அந்த முதியவரின் உடலும் எரிந்துப் போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆராவ் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிண்டென்டன்ட் அமாட் மோஸின் முகமட் ரோடி தெரிவித்தார்.

Comments