கோலாலம்பூர்:
2021 ஆம் ஆண்டுக்கும் 2024 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அரசாங்கப் பணியாளர்களில் 10 முதல் 13 விழுக்காட்டினர் திவாலாகி இருக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் புதியவர்கள் என்று மலேசிய திவால் இலாகா தலைமை இயக்குனர் டத்தோ எம் பக்ரி அப்துல் மஜிட் கூறினார்.
இந்தப் போக்கானது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என்று அவர் சொன்னார்.
2020 ஆம் ஆண்டில் அரசு பணியாளர்களில் 12 விழுக்காட்டினர் திவாலாகினர். 2021 இல் 10 விழுக்காடு, 2022 இல் 11 விழுக்காடு, 2023 இல் 13 விழுக்காடு, 2024 இல் இதுவரை 14 விழுக்காடு என்பதாக திவாலானவர்கள் எண்ணிக்கை ஏறுமுகத்தில் உள்ளது என்று டத்தோ பக்ரி குறிப்பிட்டார்.
நிதி நிர்வகிப்பில் தோல்வி கண்டதன் விளைவே தனிநபர்களின் இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்று அவர் சொன்னார்