Offline
6 மாநிலங்களில் இடி, மின்னல், கன மழைக்கு வாய்ப்பு
News
Published on 09/10/2024

கோலாலம்பூர்

நாட்டிலுள்ள ஆறு மாநிலங்களைச் சேர்ந்த பல மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

புத்ராஜெயா, பெர்லிஸ், கெடா, பேராக், சிலாங்கூர், சபா ஆகிய மாநிலங்களின் பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வகமான மெட்மலேசியா எச்சரித்தது,

கெடா மாநிலத்தில் லங்காவி ,குபாங் பாசு ஆகிய பகுதிகளும் பேராக் மாநிலத்தில் மஞ்சோங், மத்திய பேராக், கம்பார், பாகான் டத்தோ, கீழ்ப்பேரா, பத்தாங் பாடாங், முவாலிம் ஆகிய பகுதிகளும் சிலாங்கூரில் சபாக் பெர்னாம், கோல சிலாங்கூர், கிள்ளான், கோல லங்காட், சிப்பாங், சபாவில் நபாவான் உட்பகுதி, தாவாவ், குனாக், செம்போர்ணா ஆகிய இடங்களிலும் கனமழை பெய்யும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

மணிக்கு 20 மில்லிமீட்டர் அளவு பெய்யக்கூடிய கனமழை 1 மணி நேரத்திற்கும் கூடுதலான நேரத்தில் பெய்யக்கூடும் என்று X வலைத்தளத்தில் தகவல் மெட்மலேசியா தகவல் அறிவித்திருக்கிறது.

புயலுடன் கூடிய கனமழை என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றனர்.

Comments