Offline

LATEST NEWS

இந்தோனீசிய ஓடுபாதையில் சறுக்கிய விமானம்; சிலர் காயம்
Published on 09/10/2024 20:38
News

ஜகார்த்தா: கிழக்கு இந்தோனீசியாவில் உள்ள பாப்புவா வட்டாரத்தில் 48 பேர் கொண்ட விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து சறுக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.அந்தச் சம்பவத்தில் சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

பாப்புவா, மலைப்பகுதிகளில் அமைந்துள்ளது. அடிக்கடி ஏற்படும் மோசமான வானிலை காரணமாக அங்கு விமானங்கள் பறப்பதற்கு இடையூறுகள் ஏற்படுவதுண்டு.

‘டிரிகானா ஏர்’ நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த ஏடிஆர்-42 ரக விமானம் ஜெயாபுறா பகுதிக்குச் செல்ல, யாப்பென் தீவுகளில் உள்ள விமான நிலையத்திலிருந்து செப்டம்பர் 9ஆம் தேதி காலை புறப்பட்டபோது ஓடுபாதையிலிருந்து சறுக்கியது.

அந்த விமானத்தில் ஒரு கைக்குழந்தை உட்பட 42 பயணிகளும் ஆறு ஊழியர்களும் இருந்தனர்.

Comments