Offline
நைஜீரியாவில் பயங்கரம்; டேங்கர் லோரி வெடித்து சிதறியதில் 48 பேர் பலி
News
Published on 09/10/2024

நைஜர்:

நைஜீரியாவில் டேங்கர் லோரி மற்றொரு வாகனத்தின் மீது மோதி வெடித்து சிதறியதில் 48 பேர் உயிரிழந்தனர்.

நைஜீரியாவில் எண்ணெய் வளம் அதிகம் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களை, சாலை மார்க்கமாக கொண்டு செல்லும்போது வெடி விபத்து ஏற்படுவது வாடிக்கையாக நடக்கிறது.

நேற்று நைஜர் மாகாணத்தில் உள்ள அகெயி நகரில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி, கால்நடைகளை சுமந்து சென்ற மற்றொரு லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது, டேங்கரில் இருந்த எரிபொருள் வெடித்து சிதறியது. இதனால், சாலையில் சென்று கொண்டிருந்த சக வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.

மீட்புக்குழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்து, தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும், வாகனங்களில் வந்த 48 பேர் உயிரிழந்தனர்.

நைஜீரியாவில் 2020ம் ஆண்டில் மட்டும் 1,531 டேங்கர் லாரிகள் விபத்துக்குள்ளானதில், 535 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,142 பேர் படுகாயமடைந்ததாகவும், சாலை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

 

Comments