கோலாலம்பூர், ஜாலான் செந்தூலில் 2022 ஆம் ஆண்டில் இருந்து சட்டத்திற்குப்புறம்பாக ஓர் அழகு நிலையமாகவும் பல்மருத்துவ கிளினிக்காகவும் ஒரு வணிகத்தளம் செயல்பட்டு வந்தது நேற்று வெளிச்சத்திற்கு வந்தது.
பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து கூட்டரசு பிரதேசம், புத்ராஜெயா மருத்துவ இலாகாவின் பல் சிகிச்சை பிரிவு, தனியார் மருத்துவ கட்டுப்பாட்டு பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.20 மணியளவில் அங்கு களமிறங்கினர்.
பல் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு பிரத்தியேக அறையும் இருந்தது. ஒரு பெண் உட்பட 22 முதல் 31 வயதிற்குட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த அழகு நிலையம் மலேசிய சுகாதார அமைச்சில் பதிவு செய்திருக்கவில்லை என்று கூட்டரசு பிரதேசம், புத்ராஜெயா சுகாதாரம், பல் மருத்துவம் அமலாக்க அதிகாரி டாக்டர் அஸ்ஃபார் அப்துல்லா கூறினார்.
இன்ஸ்டாகிராம், டிக் டோக் சமூக ஊடகத்தில் இவர்கள் இத்தொழிலை நடத்தி வந்திருக்கின்றனர்.