Offline

LATEST NEWS

ஊழல் தொடர்பில் நெகிரி செம்பிலான் காவல்துறைத் தலைவர் கைதா? எம்ஏசிசி மறுப்பு
Published on 09/12/2024 02:12
News

ஊழல் விசாரணையின் ஒரு பகுதியாக நெகிரி செம்பிலான் காவல்துறைத் தலைவர் அகமட் ஜப்பிர் யூசோப்பைக் கைது செய்ய உள்ளதாக கூறும் தகவலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மறுத்துள்ளது. நெகிரி செம்பிலான் போலீஸ் படையின் செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர் MACC ஆல் கைது செய்யப்பட்டதாகவும் மேலும் 4 மில்லியனுக்கும் அதிகமான பணம் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் விசில்ப்ளோவர் எடிசி சியாசட்டின் டெலிகிராம் பதிவு வழி அறியப்படுகிறது.

அப்பதிவில் எடிசி சியாசட், நெகிரி செம்பிலானில் உள்ள பல மாவட்ட காவல்துறை தலைவர்களும் தடுத்து வைக்கப்படலாம் என்றும் கூறியிருந்தார். உரிமைகோரல்கள் பற்றி தொடர்பு கொண்டபோது, ​​MACC தலைமை ஆணையர் அஸாம் பாக்கி வெறுமனே  அது சரியல்ல. பொய்யான செய்தி என்று மட்டும் கூறினார். ஜப்பிர் மேலும் குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு எப்ஃஎம்டியிடம் இது போலி செய்தி என்றார். செப்டம்பர் 2022 இல் நெகிரி செம்பிலான் காவல்துறைத் தலைவராக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு, ஜப்பிர் கோலாலம்பூர் போலீல் படை கல்லூரியின் படைத்தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments