Offline

LATEST NEWS

3 வயது மகனுடன் தண்டவாளத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்த தம்பதி.. ரெயில் மோதி மூவரும் உயிரிழந்த சோகம்
Published on 09/12/2024 02:22
News

உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே தண்டவாளத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த கணவன் மனைவி மற்றும் அவர்களது 3 வயது மகன் ரெயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் லக்ஹிம்பூர் கேரி [Lakhimpur Kheri] மாவட்டத்தில் உள்ள உமாரியா[Umariya] கிராமத்தின் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.

அருகே உள்ள சீதாபூர் மாவட்டத்தின் லஹர்பூர் பகுதியைச் சேர்ந்த முகமது அகமது (26 வயது), அவரது மனைவி நஜ்னீன் (24 வயது) இன்று காலை 11 மணி அளவில் அவர்களது 3 வயது மகன் அப்துல்லாவுடன் உமாரியா கிராமத்தின் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் நின்றுகொண்டு சோசியல் மீடியாவில் பதிவிடுவதற்காக ரீலிஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த ரெயில் அவர்கள் மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்தனர். அவர்களது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறனர்

Comments