Offline

LATEST NEWS

ஆந்திரா, தெலுங்கானா மழை வெள்ள பாதிப்பு – நிதியுதவி வழங்கிய நடிகர் சிம்பு
Published on 09/12/2024 02:39
News

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்தது. மழை வெள்ளத்தில் சிக்கி சுமார் 4½ லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரவு பகல் பாராது பாதிக்கப்பட்ட மக்களையும் மீட்டெடுத்து முகாம்களில் தங்க வைத்துள்ளனர். இந்த நிலையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண் , பிரபாஸ், மகேஷ் பாபு, சிரஞ்சீவி, பாலய்யா, ஜூனியர் என்.டி.ஆர். அல்லு அர்ஜுன் ஆகியோர் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் தமிழ் திரையுலகில் இருந்து நடிகர் சிம்பு கிட்டத்தட்ட ரூ.6 லட்சம் வரை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்கியிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கின்றன.

Comments