Offline
Menu
தேசிய கார்பந்தய வீரர் எல்லி இட்ஸ்லியானிஸார் வெட்டிக்கொலை
Published on 09/13/2024 02:40
News

கோலாலம்பூர்:

தேசிய கார்பந்தய வீரர் எல்லி இட்ஸ்லியானிஸார் கத்தியால் வெட்டியும் குத்தியும் கொலை செய்யப்பட்டதை போலீஸ் உறுதிப்படுத்தியது.

மோட்டோ ஜிபி, கப் பிரி உள்ளிட்ட தேசிய கார் பந்தயங்களில் பங்கேற்ற அவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் கங்காரில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

கங்கார், டத்தோ அலி சாலையில் உள்ள பெஹோர் கொன்சார் ஜெயா தாமானில் உள்ள வீடொன்றுக்கு ஆவேசமாக சென்ற அவர் அங்கிருந்த 51 வயது நபருடன் சண்டையிட்டப் பின்னர் அங்கு தகராறு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

40 வயதான எல்லி இட்ஸ்லியானிஸார் வெட்டப்பட்டதன் தொடர்பில் இரவு 11.13 மணியளவில் போலீஸுக்கு தகவல் கிடைக்கப் பெற்றதாக கங்கார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி யுஸாரிஃபுடின் யூசோப் தெரிவித்தார்.

அந்தத் தாமானுக்கு நுழையும் சாலை முச்சந்தியில் நால்வருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் அவர் தாக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Comments