Offline
வாயில் நுரை தள்ளிய நிலையில் காருக்குள் பிணமாகிக் கிடந்த கார் இழுவை தொழிலாளிகள்
Published on 09/13/2024 02:46
News

அம்பாங்:

கார் இழுவைத் தொழிலாளிகள் இருவர், வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர்.

அம்பாங், தாமான் அம்பாங் சௌஜானா, பெர்சியாரான் 9 சாலைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் அந்தப் பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பூட்டப்பட்ட கார் ஒன்றினுள், ஜன்னல் கண்ணாடிகள் இறுக சாத்தப்பட்ட நிலையில் கார் இஞ்ஜின் இயங்கியவாறே இருக்க அவர்கள் இருவரும் சுயநினைவின்றிக் கிடந்தனர்.

அவர்களின் உடல்களில் காயம் ஏதும் காணப்படவில்லை என்று அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த அம்பாங் மருத்துவமனை ஆம்புலன்ஸ் அதிகாரிகள் அவ்விருவரும் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.

அந்த உடல்கள் பின்னர் சவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டன. தற்சமயத்திற்கு இந்தச் சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டிருப்பதாக முகமட் அஸாம் கூறினார்.

Comments