Offline
கோலோக் ஆற்றங்கரையில் கடத்தல் கால்நடைகள் என நம்பப்படும் 12 மாடுகள் பறிமுதல்
News
Published on 09/13/2024

தானா மேரா:

மலேசியா – தாய்லாந்து எல்லையில் உள்ள கோலோக் ஆற்றங் கரையில், நேற்று மதியம் 1.15 மணியளவில், 60,000 ரிங்கிட் மதிப்புள்ள 12 கடத்தல் மாடுகளை மலேசிய இராணுவத்தினர் கைப்பற்றினர்.

எட்டாவது மலேசிய காலாட்படை படையின் (KTJ 8 Bgd) பொறுப்பிலுள்ள பகுதியில் குறித்த மாடுகள் கைப்பற்றப்பட்டது என்று, இரண்டாவது மலேசிய காலாட்படை பிரிவின் (2 பிரிவு) தலைமையகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“சம்பவத்தின் போது, ​​ரோந்துப் பணியில் இருந்த செயல்பாட்டுக் குழுவினர், தாய்லாந்தில் இருந்து மலேசியாவிற்கு ஆழமற்ற ஆற்றின் வழியாக அனைத்து கால்நடைகளையும் கொண்டு வந்து, விலங்கு கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மூன்று பேரைக் கண்டறிந்தது என்றும், இருப்பினும், மூன்று சந்தேக நபர்களில் இருவர் கோலோக் ஆற்றைக் கடந்து தாய்லாந்திற்கு தப்பினர், மற்றவர் நான்கு சக்கர வாகனத்தில் தப்பினார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகள் ரந்தாவ் பஞ்சாங்கிலுள்ள மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் துறையிடம் (மக்கிஸ்) ஒப்படைக்கப்பட்டன, அதே நேரத்தில் இந்த விலங்கு கடத்தல் வழக்கு தொடர்பில் தேசிய சுங்கத் துறை விசாரணையை மேற்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.

Comments