Offline
குவைத்தில் வேலைக்கு சென்ற பெண்ணுக்கு சித்ரவதை
News
Published on 09/15/2024

விஜயவாடா: ஆந்திர மாநிலம், அன்னமைய்யா மாவட்டத்தை சேர்ந்தவர் கவிதா.இவர் குடும்பத்தை காப்பாற்ற வேலை தேடி ஒரு இடைத்தரகர் மூலம் குவைத்துக்கு சென்றுள்ளார். அங்கு கவிதாவுக்கு கூறியபடி வேலையோ, ஊதியமோ கிடைக்க வில்லை. அப்போதுதான் அவர் ஏமாற்றப்பட்டார் எனும் விஷயம் தெரியவந்துள்ளது.

இது குறித்து கேட்டதற்கு, அவரது எஜமானி, அவரை வீட்டில்அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார். சரிவர உணவு கூட வழங்குவதில்லை. இது குறித்து இடைத்தரகருக்கு கூறலாம் என்றால் அவர் செல்போனை ‘பிளாக்’ செய்து விட்டார்.

உடலாலும், மனதாலும் மிகவும் பாதிக்கப்பட்ட கவிதா, தனது செல்போனில் தான்படும் அவஸ்தைகள் குறித்து வீடியோ பதிவு செய்து, அதனை ஆந்திர மாநில அமைச்சர் ராம் பிரசாத் ரெட்டிக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவில், தனது கணவர் மாற்றுத்திறனாளி என்றும், தனக்கு 2 குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவித்த கவிதா, குவைத்துக்கு பிழைப்பு தேடி வந்து சித்ரவதை அனுபவிப்பதாக தெரிவித்திருந்தார். தன்னை மீட்க நடவடிக்கை எடுக்கும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து கவிதாவை மீட்க மத்திய இணை அமைச்சர் கொண்டபல்லி ஸ்ரீநிவாஸிடம் சிபாரிசு செய்துள்ளார். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

Comments