Offline
சாலைகளில் கடுமையான வாகனப் போக்குவரத்து நெரிசல்! தீர்வு தான் என்ன?
News
Published on 09/18/2024

கோலாலம்பூர்:

சாலைகளில் ஏற்படும் கடுமையான வாகனப் போக்குவரத்து நெரிசலுக்கு உரிய தீர்வு காண்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை ஆலோசித்து வருகிறது.

நெடுஞ்சாலைகளில் நிலவும் கடுமையான வாகனப் போக்குவரத்து நெரிசல்களை,குறிப்பாக விழாக் காலங்களில் ஏற்படும் வாகன நெரிசல்களைத் தீர்க்க அரசாங்கம் பல்வேறு வழிவகைகளைக் கையாளுகிறது என்று போக்குவரத்து துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ அமாட் மஸ்லான் தெரிவித்தார்.

வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் சாலைகளில் நெரிசல்கள் ஏற்படுகின்றன என்ற காரணத்தை இனியும் கூறிக்கொண்டிருக்க முடியாது.

மாறாக இன்றைய நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு, இந்தப் போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்ப்பதற்கான உபாயங்கள் ஆராயப்பட வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

பிளஸ் நிறுவனம் உள்ளிட்ட பிற நெடுஞ்சாலைகள் கட்டுமான நிறுவனங்கள், ஏஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் போக்குவரத்து நெரிசல்களைக், குறிப்பாக இரண்டு தினங்களுக்கும் கூடுதலான விடுமுறைகள் அனுசரிக்கப்படும் காலகட்டங்களில் நீண்ட நெடுந் தூரத்திற்குப் பல மணி நேரங்கள் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து நெரிசல்களைக் குறைப்பதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும்.

அதற்கான தீர்வு கட்டாயம் கண்டறியப்பட வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

ஜோகூர்பாருவில் இன்று நெடுஞ்சாலை கட்டுமான கூட்டத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

Comments