Offline
Menu
கார் பூத்துக்குள் பாதுகாவலர் சடலம்
Published on 09/18/2024 00:12
News

கோலாலம்பூர்:

பாதுகாவலர் ஒருவரின் சடலம் கார் பூத்தில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

சபாக் பெர்ணம், தாமான் பெர்த்தாமா , ஜாலான் பாசீர் என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புரோட்டோன் சாகா கார் ஒன்றின் பூத்தில் நேற்று மாலை 6.04 மணியளவில் அந்தச் சடலம் மீட்கப்பட்டது.

ரோந்துப் போலீசாரிடமிருந்து அது குறித்த தகவல் பெறப்பட்டதாக சபாக் பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிண்டென்டன்ட் ரோபின் குகா தெரிவித்தார்.

சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்தக் கார்

சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததைத் தொடர்ந்து அதில் சோதனை நடத்தப்பட்டதில் சடலம் இருந்த விவரம் அம்பலமானது.

அதில் பிணமாக அடைக்கப்பட்டிருந்த பாதுகாவலருக்கு 43 வயது என்றும், அவர் இங்குள்ள சுற்றுவட்டாரப் பகுதியில் பாதுகாவலராக வேலை பார்த்து வந்தார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த மரணத்தில் குற்ற அம்சங்கள் காணப்படுவதால் குற்றவியல் சட்டம் பிரிவு 302 கீழ் விசாரணை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது என்று அவர் சொன்னார்.

Comments