Offline
ரைடர்களுக்கு நெருக்குதல் தராதீர்கள்
News
Published on 09/18/2024

கோலாலம்பூர்:

ஒரு பொருளையோ உணவையோ பட்டுவாடா செய்வதற்கு ரைடர்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.

கிரேப், லாலாமூவ் போன்ற ரைடர்கள் டிரிப்புக்காக உயிரை பணயம் வைத்து நீண்ட நேரம் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

கிட்டத்தட்ட 18 மணி வேலைக்கு அவர்களின் வருமானம் 180 ரிங்கிட்டாகத்தான் இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என்ற நெருக்குதல்கள் அவர்களுக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

மேலும் இ-ஹெய்லிங் ரைடர்கள் சாலை விதிகளை மீறுவதற்கும் தூண்டப்படுகிறது என்று மலேசிய புத்ரா பல்கலைக்கழக சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு நிபுணர் பேராசிரியர் லாவ் தெய்க் ஹுவா கூறினார்.

டிரிப்புக்காக இந்த ரைடர்கள் இடையிலான போட்டாப் போட்டி அதிகமான ஆபத்துகளுக்கும் அடிப்படை காரணமாக அமைந்து விடுகின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Comments