ஜோகூர் பாரு:
ஜோகூரில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக, பத்து பகாட் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குளுவாங், பொந்தியான் மற்றும் பத்து பகாட் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 240 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 808 பேர் அங்குள்ள 10 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று, மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார்.
இந்த எண்ணிக்கை நேற்று 199 குடும்பங்களைச் சேர்ந்த 674 பேராக இருந்தது குறிப்பிடத்தக்கது.