Offline
வடகிழக்கு பருவமழை நவம்பர் 5 முதல் அடுத்தாண்டு மார்ச் வரை நீடிக்கும்
News
Published on 11/02/2024

கோலாலம்பூர்:

வடகிழக்கு பருவமழை வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையால் நாட்டில் பெரும் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று அதன் தலைமை இயக்குநர், டாக்டர் முகமட் ஹிஷாம் முஹமட் அனிஃப் தெரிவித்தார்.

குறிப்பாக 5 முதல் 7 முறை கனமழையைக் கொண்டு வரும்.

உதாரணமாக இந்த இரண்டு மாதங்களுக்குள் கிளந்தான், திரெங்கானு, பகாங், ஜோகூர், சரவா, சபா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பகாங், ஜோகூர், சரவா, சபா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் சாத்தியம் உள்ளது என்றும் அவர் சொன்னார்.

இந்த வடகிழக்கு பருவமழை வலுவாகவும், அதே நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் இருந்தால், மற்ற மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும் என்றும் அவர் கூறினார்.

Comments