கோலாலம்பூர்:
மலேசியாவில் உள்ள பல்வேறு இனங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசுவோரை தான் துளி அளவும் சகித்துக் கொள்ளமாட்டேன் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
இவாறான செயல் மலேசியாவில் இன வெறுப்புணர்வு தோன்றுவதற்கான அடையாளம் என்று குறிப்பிட்ட அன்வார், இதற்கு உதாரணங்களாக குறிப்பிட்ட இனத்தவரின் அங்க அடையாளங்களைக் கேலி செய்வது, கோணலாக இருக்கும் கண்கள், கறுத்த உடல் நிறத்துடையோர் ஆகியோருடன் ஒத்துழைக்க மறுப்பது போன்றவற்றை சுட்டினார்.
“இஸ்லாமிய மதம் ஒருவரின் உடல் நிறத்தை அவமதிக்க அனுமதிக்கிறதா?, கறுத்த உடல் நிறமும், தடித்த உதடுகளையும் உடைய பிலால் பின் ராபா என்பவரை நபிகள் நாயகத்தின் குடும்பத்தார் தங்களைச் சேர்ந்த ஒருவராக அரவணைக்கவில்லையா?,” என தேசிய தற்காப்பு பல்கலைக்கழகம் இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 1ஆம் தேதி) ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, உரையாற்றியபோது அவர் இந்தக் கேள்விகளைக் கேட்டார்.
அந்த நிகழ்ச்சியில் மலேசிய தற்காப்பு அமைச்சர் முகமது காலிட் நோர்டின், உயர்கல்வி அமைச்சர் டாக்டர் ஸாம்பிரி அப்துல் காதிர், பல்கலைக்கழக துணை வேந்தர் லெஃப்டினண்ட் ஜெனரல் மார்ட்சுக்கி முகமட் ஆகியோரும் பங்கேற்றனர் என்பது குறுப்பிடத்தக்கது.