Offline
சுங்க சாவடியில் மோதிய கார்- 18 வயது பயணி பலி
Published on 12/07/2024 00:54
News

பினாங்கில் இன்று காலை சுங்கை துவா சுங்கச்சாவடியின் தடுப்பில் மோதியதில் 18 வயது பயணி ஒருவர் உயிரிழந்தார். பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் கூறுகையில், கார் தெற்கு நோக்கி சுங்கச்சாவடியை நோக்கி பயணித்தபோது சறுக்கி, டிவைடரில் மோதி, காரின் முன்பகுதி நொறுங்கியது.

இச்சம்பவம் குறித்து துறைக்கு காலை 10 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வாகனத்தில் இருந்த ஓட்டுநரையும், மற்றொரு பயணியையும் பொதுமக்கள் வெளியே இழுத்தனர். 18 மற்றும் 22 வயதுடைய இருவரும் காயமடைந்துள்ளனர்.

பின் இருக்கையில் சிக்கிக் கொண்ட பயணி உயிரிழந்தார். சம்பவ இடத்திலேயே அவரது மரணத்தை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தும் முன், தீயணைப்பு வீரர்கள் அவரை காரில் இருந்து மீட்டெடுத்தனர்.

Comments