Offline
Menu
சீனாவிலும் மகாராஜாவின் வெற்றி : இயக்குனர் நித்திலனுக்கு 80 லட்சம் மதிப்பிலான கார் பரிசளித்த தயாரிப்பாளர்
Published on 12/20/2024 00:58
Entertainment

விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் ரசிகர்களிடமும் பாராட்டுக்களை பெற்று சில விருதுகளையும் சம்பாதித்த குரங்கு பொம்மை என்கிற படத்தை இயக்கியவர் நித்திலன் சாமிநாதன்.

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு விஜய் சேதுபதியை வைத்து இவர் இயக்கிய மகாராஜா திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. வித்தியாசமான பழிவாங்கல் பின்னணியில் உருவாகி இருந்த இந்த படத்திற்கு அனைத்து தரப்பில் இருந்தும் மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்தன. படமும் மிகப்பெரிய அளவில் வசூலித்து வெற்றி படமாக மாறியது.

இந்த நிலையில் இந்த படம் சமீபத்தில் சீன மொழியிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. ஆச்சரியமாக சீனாவிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து அங்கேயும் வெற்றி படமாக தன்னை பதிவு செய்து கொண்டுள்ளது. அங்கே இதுவரை கிட்டத்தட்ட 80 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக மகாராஜா படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் நித்திலனுக்கு 80 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

Comments