கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‛ரெட்ரோ’ படத்தில் நடித்து முடித்துவிட்ட சூர்யா அடுத்தப்படியாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கின்றார். இதில் கதாநாயகியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். சுவாசிகா, நட்டி நட்ராஜ், இந்திரன்ஸ், சிவதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு ஏற்கனவே கோவையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். .சூர்யாவிற்கு எதிர்தரப்பு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறாராம். இந்த கதாபாத்திரம் நெகட்டிவ் கதாபாத்திரமாக உள்ளது என்கிறார்கள்.