Offline

LATEST NEWS

ரத்தம் தெறிக்கும் “மார்கோ” பாக்ஸ் ஆபிசில் 100 கோடி ரூபாயை அள்ளியது
Published on 01/07/2025 01:03
Entertainment

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் உன்னி முகுந்தன். சமீபத்தில் வெளியான கருடன் திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் மக்கள் மனதில் பதிந்தார். இவர் தற்பொழுது மார்கோ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஹனீஃப் அதேனி இயக்கியுள்ளார். இதற்கு முன் நிவின் பாலி நடித்த மைக்கேல் படத்தை இயக்கியவராவர்.

திரைப்படம் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி மலையாள மொழியில் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. திரைப்படம் மிகவும் ஆக்ஷன், வயலன்ஸ், துப்பாக்கி, ரவுடிசம் நிறைந்த கதைக்களமாக அமைந்துள்ளது. இதுவரை இப்படி வன்முறை நிறைந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகவில்லை என பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

படத்தின் பின்னணி இசை ரவி பஸ்ருர் மேற்கொடுள்ளார். இப்படத்தில் உன்னி முகுந்தனுடன் யுக்தி தரேஜா, சித்திக், ஜெகதீஷ் , அபிமன்யூ மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இப்படம் கடந்த 3 ஆம் தேதி தமிழில் வெளியானது. இந்நிலையில் திரைப்படம் உல்களவில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

Comments