Offline

LATEST NEWS

துபாய் கார் பந்தயம் – மீண்டும் பயிற்சியில் ஈடுபட்ட அஜித் குமார்
Published on 01/11/2025 04:53
Entertainment

நடிகர் அஜித் குமார், மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்துள்ளார்.சமீபத்தில் ‘அஜித்குமார் ரேஸிங்’என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கி அஜித், தற்போது அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகி்றார். அதன்படி கார் ரேஸிங்கில் கலந்துகொள்வதற்காக அவர் துபாய் சென்றார்.

அங்கு ரேசிற்கான பயிற்சியில் அஜித் கலந்துக்கொண்டார். அப்பொழுது அவர் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. அதன் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் அஜித்திற்கு ஒன்றும் ஆகாமல் உயிர் தப்பினார். கார் முன் பகுதி மிகுந்த சேதம் அடைந்தது.இந்நிலையில் கார் பந்தய பயிற்சியில் விபத்து ஏற்பட்ட நிலையில், இன்று 2 கட்டமாக நடந்த தகுதிச் சுற்றில் அஜித் குமார் பங்கேற்று கார் ஓட்டியுள்ளார். நாளை நடக்கும் கார் அணிவகுப்பிலும் அஜித் குமார் பங்கேற்பார் என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார்.

Comments