Offline
காஷ்மீர்: கிராமத்தில் 16 மர்ம மரணங்கள்; மத்திய குழு இன்று ஆய்வு
Entertainment
Published on 01/21/2025

ஜம்மு,ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரஜோரி மாவட்டத்தில் புதல் கிராமத்தில் மர்ம நோய் தாக்குதல் ஏற்பட்டு உள்ளது. இதனால், கடந்த 45 நாட்களில் 16 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். இது கிராமத்தினரிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மர்ம நோய்க்கு ஆளானவர்களுக்கு காய்ச்சல், வலி, குமட்டல் மற்றும் சுயநினைவை இழத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. அவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். ஒரு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, காஷ்மீரில் 16 பேர் மர்ம நோய் பாதிப்புக்கு பலியான சம்பவம் பற்றி ஆய்வு செய்ய மந்திரிகள் மட்டத்திலான குழு ஒன்றை அமைத்து உள்ளார். அந்த குழுவினர் காஷ்மீருக்கு இன்று சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இந்த மர்ம மரணங்கள் பற்றி மத்திய குழு இன்று ஆய்வு மேற்கொள்கிறது. எனினும், தொற்று வியாதிக்கான சாத்தியம் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments