ஆஸ்திரேலிய ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய ஸ்வரேவ் மற்றும் படோசா
சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் 4வது சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன. ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் ஹ்யூகோ ஹம்பர்ட் மீது 6-1, 2-6, 6-3, 6-2 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
பெண்கள் பிரிவில், ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, செர்பியாவின் ஒல்காவை 6-1, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.