நகைச்சுவை நடிகர் யோகி பாபு, சமீபத்தில் திருப்பதி, திருத்தணி, திருச்செந்தூர் உள்ளிட்ட ஆலயங்களில் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்து வருகின்றார். கடவுளின் நம்பிக்கையுடன், கழுத்திலும் கையிலும் கயிறுகள் கட்டியுள்ளார். ஒரு நிகழ்ச்சியில், "என்ன காரணம்?" என்ற கேள்விக்கு யோகி பாபு, "இதெல்லாம் சாமி விஷயம். இது நமது முன்னோர்களின் பாரம்பரியம். இதைப் பற்றி மேலே பேச தேவையில்லை" என பதில் அளித்தார்.