Offline

LATEST NEWS

மகிழ் திருமேனியின் அடுத்த பட ஹீரோ யார்? தெரியுமா?
Published on 01/26/2025 15:20
Entertainment

அஜித் குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படத்தை இயக்கிய மகிழ் திருமேனி, பல தரமான படங்களை இயக்கியாலும், உச்ச நடிகர்களுடன் பணியாற்றாமல் இருந்ததால் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. ஆனால், அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி படத்தை உருவாக்கியுள்ளார், இது பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியாவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ப்ரோமோஷனில் மகிழ் திருமேனி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தன் அடுத்த படத்திற்கு பெரிய ஹீரோவுடன் பணியாற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் தற்போது அவர் அடுத்த படத்தில் விக்ரம் அல்லது சூர்யாவை ஹீரோவாக எதிர்பார்க்கின்றனர். சிலர், அஜித்துடன் தொடர்ந்தும் பணியாற்றுவதாக அவர் கூறியதை வைத்தும், அடுத்த படம் அதே ஹீரோவுடன் இருக்க வாய்ப்பு உள்ளது என எண்ணுகின்றனர்.

Comments