Offline

LATEST NEWS

கார் விபத்தில் உயிர் தப்பிய இமான் அண்ணாச்சி!
Published on 01/29/2025 01:05
Entertainment

சின்னத்திரையில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டீஸ் சுட்டீஸ் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் இமான் அண்ணாச்சி. அதன்பிறகு வேட்டைக்காரன், அங்காடித்தெரு, மரியான், காக்கி சட்டை என பல படங்களில் காமெடியனாக நடித்தவர், இப்போதும் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தனது இணையப் பக்கத்தில் தனக்கு ஏற்பட்ட ஒரு விபத்து குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதில், சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் புறவழி சாலையில் தான் காரில் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தபோது, குறுக்கே ஒரு மாடு வந்ததால் கார் நிலை தடுமாறி விபத்தில் சிக்கியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம் என்று தெரிவித்திருக்கும் இமான் அண்ணாச்சி, மாடுகளால் ஏற்படும் விபத்தை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்.

Comments