Offline

LATEST NEWS

விஷாலுடன் திருமணம்? – 15 வருட ரகசியம் பகிர்ந்த `நாடோடிகள்’ அபிநயா
Published on 01/31/2025 04:52
Entertainment

தமிழ் சினிமாவில் "நாடோடிகள்" படத்தில் அறிமுகமான நடிகை அபிநயா, சசிக்குமாரின் தங்கையாகவும், விஜய் வசந்தின் ஜோடியாகவும் நடித்து கவனம் பெற்றார். அதன் பின்னர், "ஈசன்", "ஏழாம் அறிவு", "வீரம்", "தனி ஒருவன்", "தாக்க தாக்க", "ஆயிரத்தில் ஒருவன்" என பல பிரபல படங்களில் நடித்தார்.

இந்த நிலையில், நடிகர் விஷாலுடன் திருமணம் செய்யப்போவதாக பரவிய வதந்திகளுக்கு அபிநயா பதிலளித்துள்ளார். அவர், விஷாலுடன் "பூஜை" மற்றும் "மார்க் ஆண்டனி" படங்களில் இணைந்து நடித்தார். சமீபத்தில், அவை குறித்து பேசிய அபினயா, அந்த தகவலை மறுத்தார். மேலும், 15 வருடங்களாக தனது நண்பருடன் காதலித்து வருவதாகவும், விரைவில் அவருடன் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்தார்.

Comments