அஜித் நடிப்பில் கடந்த 6ஆம் தேதி வெளியான ‘விடாமுயற்சி’ படத்தின் வசூல் நான்கு நாள்களில் ரூ.100 கோடி ரூபாயைக் கடந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இப்படத்தை 900 திரையரங்குகளில் வெளியிட்டனர்.
நான்கு நாள்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.60 கோடியும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் ரூ.10 கோடியும் உலகம் முழுவதும் ரூ.30 கோடியும் வசூல் குவிந்துள்ளதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.