நடிகை தமன்னா, அசோக் தேஜா இயக்கத்தில் வெளிவரவுள்ள ‘ஓடேலா-2’ படத்தில் பெண் துறவியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் டீசர், உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் வெளியிடப்பட்டது. விழாவில் தமன்னா தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் தமன்னா தனது குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். தொடர்ந்து சிறப்பு வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.தமன்னா சமீபகாலமாகவே ஆன்மிகத்தில் அதிக நாட்டம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.