Offline

LATEST NEWS

அஜித்தின் “குட் பேட் அக்லி” டீசர் வெளியானது
Published on 03/02/2025 14:15
Entertainment

சென்னை,ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் சுமார் ரூ.270 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. சமீபத்தில் திரிஷாவின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியானது.

இந்நிலையில் ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது குறித்த பதிவை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Comments