சமந்தா சினிமாவில் 15 ஆண்டுகள் நிறைவு – நெகிழ்ச்சி பதிவு
சென்னை: நடிகை சமந்தா சினிமாவில் 15 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். 2010-ல் "விண்ணைதாண்டி வருவாயா" படத்துடன் சினிமாவில் அறிமுகமான சமந்தா, பானா காத்தாடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பின்னர், "மாஸ்கோவின் காவிரி", "நடுநிசி நாய்கள்", "நீதானே என் பொன் வசந்தம்", "தீயா வேலை செய்யனும் குமாரு" போன்ற படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக "காத்துவாக்குல ரெண்டு காதல்" படத்தில் நடித்த சமந்தாவுக்கு தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனினும், "சாகுந்தலம்" மற்றும் "குஷி" படங்களில் தெலுங்கில் நடித்தார். இப்போது சிகிச்சை பெற்றுவிட்டு சினிமாவிற்கு திரும்பிய சமந்தா, பாலிவுட்டில் வெப் சீரிஸ்களில் நடித்து, "மா இண்டி பங்காரம்" என்ற தெலுங்கு படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.
15 ஆண்டு சினிமா வாழ்க்கையை கொண்டாடும் நிகழ்வில் கலந்து கொண்ட சமந்தா, இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து, "நன்றி சென்னை" என்று பதிவிட்டுள்ளார்.