தென்னிந்திய திரை உலகின் பிரபல நடிகை சாய் பல்லவி, மருத்துவ படிப்பை முடித்த பிறகு சினிமாவிற்கு வந்தார். ‘பிரேமம்’ மற்றும் ‘அமரன்’ போன்ற படங்களில் அவர் அறிமுகமான கதாபாத்திரங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. சமீபத்தில், அவர் நாக சைதன்யாவுடன் நடித்த "தண்டேல்" படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
ஒரு சமீபத்திய நேர்காணலில், சாய் பல்லவி கூறியதாவது: "நான் இரவு 9 மணிக்கு தூங்கி காலை 4 மணிக்கு எழுவேன். ஜார்ஜியாவில் படித்தபோது அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து படிக்கும் பழக்கம் இருந்தது. இப்போது, 4 மணிக்கு மேல் தூங்க முடியாது. படப்பிடிப்புகள் இரவு முழுவதும் நடக்கும்போதும், நான் 9 மணிக்கு மேலே தூங்காமல் இருக்க முடியாது.