மலையாள திரை உலகின் முன்னணி நடிகர் மம்மூட்டி, 2008 முதல் 2020 வரை கேரளாவின் பனம்பில்லி நகரில் குடும்பத்துடன் வாழ்ந்தார். பின்னர் அம்பேலி பாதம் சாலையில் குடிபெயர்ந்தார். தற்போது, பனம்பில்லி வீடு "மம்மூட்டி ஹவுஸ்" என்ற பெயருடன் விருந்தினர்கள் தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த வீட்டில் 4 படுக்கை அறைகள் மற்றும் ஹோம் தியேட்டர் வசதி உள்ளடங்கியுள்ளது. 1 நாளுக்கு ரூ.75 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏப்ரல் 2 முதல் முன்பதிவு தொடங்கும்.
மம்மூட்டி தற்போது "பசூக்கா" திரைப்படத்தில் நடித்துள்ளார், இது ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும்.