சென்னை, சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா கசான்ட்ரா மற்றும் பலர் நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. படப்பிடிப்பு சென்னையில் கடந்த வாரம் தொடங்கியது. இதில், நயன்தாரா மற்றும் உதவி இயக்குனருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்ற தகவல் பரவியது.
அதேவேளை, நயன்தாராவுக்கு பதிலாக தமன்னாவை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த வதந்திக்கு எதிராக குஷ்பு பதிவிடும்போது, "படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடப்பதாகவும், நயன்தாரா திரைத்துறையில் தகுதியான நடிகையாக இருப்பதாகவும்" கூறி, இந்த தகவல்களை மறுத்தார்.