Offline
ரஜினியின் “கூலி” ரிலீஸ் தேதி அறிவிப்பு
By Administrator
Published on 04/06/2025 07:00
Entertainment

சென்னை,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சுருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், அமீர் கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத், சென்னை மற்றும் பாங்காக் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படமானது ஆகஸ்ட் மாதம் அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கூலி படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனமான அமேசான் பிரைம் சுமார் ரூ.120 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments